2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கட்டுத்துவக்கு வைத்தவர் கைது

Suganthini Ratnam   / 2014 மே 13 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கிளிநொச்சி, சுண்டிக்குளம் பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்து இராணுவ வீரர் ஒருவர் காயமடைந்த நிலையில், அக்கட்டுத்துவக்கை வைத்ததாகக் கூறப்படும்  ஒருவரை  திங்கட்கிழமை (12) மாலை இராணுவத்தினர் கைதுசெய்து தம்மிடம் ஒப்படைத்ததாக  பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இராணுவ வீரரான டபிள்யூ.ஜி.எஸ்.தர்ஷன (வயது 25) என்பவர் சுண்டிக்குளம் பகுதியிலுள்ள காட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை (11) சென்றபோது,  பன்றிக்கு வைக்கப்பட்ட கட்டுத்துவக்கு  வெடித்தது. இதனால், இவர் காயமடைந்தார்.

தற்போது இவர் கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது தொடர்பில் பொலிஸார் விரிவான  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X