2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் தற்செயல் நிவாரணக் கொடுப்பனவு

Suganthini Ratnam   / 2014 மே 16 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தால், கிளிநொச்சி மாவட்டத்தில் 13 பேருக்கு தற்செயல் நிவாரணக் கொடுப்பனவாக தலா 10,000 ரூபா  கொடுக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்பாராத தீ விபத்து, கடுங்காற்று, கடும் மழை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள  மக்களுக்கு பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தால் 20,000  ரூபா வழங்கப்படவுள்ளது.

இதன் முதற்கட்டமாக 10,000 ரூபா வழங்கப்படவுள்ளது.

கரைச்சி பிரதேச செயலக பிரிவில் 8 பேருக்கும் கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் 3 பேருக்கும் பூநகரி பிரதேச செயலக பிரிவில் 2 பேருக்கும் இக்கொடுப்பனவு  வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X