2025 ஜூலை 21, திங்கட்கிழமை

குப்பைகளால் பாதிக்கப்படும் இயற்கை வளம்

Kanagaraj   / 2014 மே 17 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா பிரதேசம் அதிகளவான குளங்களை கொண்டமைந்து இயற்கை எழிலோடு நீர்வளத்தையும் காத்து வருகின்றது.இவ்வாறான குளங்கள் அண்மைக்காலமாக மனிதர்களின் இயற்கைக்கு முரணான செயற்பாடுகளால் பெரும்பாதிப்புக்கு  உள்ளாகி வருகின்றன.

குறிப்பாக குளங்களுக்குள் அத்துமீறிய குடியிருப்புகளை நிர்மாணித்தல், குளங்களினுள் குப்பைகளை கொட்டுதல் என மனிதனால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான செயல்களால் குளங்களின் அழகு குறைவதுடன்  குளங்களில் வாழும் மீன் வளமும் குறைவடைகிறது.

வவுனியா நகர்ப்புறத்திலுள்ள வைரவபுளியங்குளம். வவுனியாகுளம், பண்டாரிகுளம் ஆகியவற்றில் பொதுமக்கள் குப்;பைகளை கொட்டிவருவதனால் குளங்கள் வேகமாக மாசடைந்து வருகின்றன.

இதன் காரணமாக நன்னீர் மீன் பிடியாளர்கள் பாதிப்படைவதுடன் விவசாய நிலங்களுக்குள் பிளாஸ்டிக் பொருட்கள் செல்வதனால் விவசாய செய்கையும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும் விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை குப்பைகளை குளங்களினுள் கொட்டப்படுவதனால் குளங்களின் நீர் ஏந்து பிரதேசம் குறைவடைந்து மழை காலங்களில் குளங்களினுள் நீர் வடிந்தோட முடியாது மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்லும் நிலையும் தோன்றியுள்ளது.
எனவே குளங்களினுள் குப்பை கொட்டுபவர்கள் தொடர்பில் வவுனியா நகரசபையினர் அதிகளவில் கவனம் செலுத்த வேண்டும் என விவசாயிகளும் நன்னீர் மீன்பிடியாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X