2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வெளிக்கள பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு தளபாடங்கள்

Suganthini Ratnam   / 2014 மே 19 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி.தபேந்திரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் 95 கிராம அலுவலர் பிரிவுகளிலும்; பணியாற்றுகின்ற 95 வெளிக்கள பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு தளபாடங்கள் தற்போது வழங்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன் திங்கட்கிழமை (19) தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியில், மாவட்ட செயலகத்தின் ஊடாக 04 பிரதேச செயலர்கள் மூலமாக மேற்படி உத்தியோகத்தர்களுக்கு பெயர், பதவிப் பெயர் உள்ள பலகை, அலுவலக நாற்காலி, கடமை விபரங்களை குறிக்கும் விபரப் பலகை  ஆகியன வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தனது உத்தியோகத்தர்களின் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கில் இத்தகைய தளபாடங்களை வழங்குவதாகவும் அவர் கூறினார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் ஒரு சமுர்த்தி உத்தியோகத்தர், ஒரு வெளிக்கள பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் என்ற ரீதியில் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X