2025 ஜூலை 21, திங்கட்கிழமை

இசைப்பிரியாவுக்கு அருகில் இருப்பவரை அடையாளம் கண்டனர் அவரது பெற்றோர்

A.P.Mathan   / 2014 மே 20 , மு.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


இறுதிப்போரின் இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டதாக கூறப்பட்டு, அதற்கான ஆதார படமாக அண்மையில் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் இசைப்பிரியாவுக்கு அருகில் இருக்கின்ற மற்றைய யுவதி, மல்லாவியைச் சேர்ந்த குணலிங்கம் உஷாளினி என அவரது பெற்றோர் நேற்று உறுதிப்படுத்தினர். 
 
இது குறித்து அவர்கள் மேலும் தெரிவித்ததாவது, 
 
இறுதிப்போரில் போது நாம் முள்ளிவாய்க்காலுக்குச் சென்றிருந்தோம். அப்போது எமது மகள் உஷாளினி, 2009 மே மாதம் முற்பகுதியில் காணாமற்போயிருந்தார். மீள்குடியேற்றத்தின் பின்னர் எமது மகள் காணாமற்போனமை தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு செய்திருந்தோம். அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிலும் சாட்சிகளைப் பதிவு செய்திருந்தோம். 
 
இந்த நிலையில், ஊடகங்களில் வெளியாகிய புகைப்படத்தில் இசைப்பிரியாவுககு அருகில் எமது மகள் இருப்பதை நாம் அடையாளம் கண்டோம் என்கிறார்கள் அவரது பெற்றோர். 
 
இராணுவத்திடம் சரணடைந்த இசைப்பிரியா உட்பட ஏராளமானவர்கள், கைகள் பின்புறமாகக் கட்டப்பட்ட நிலையில் துன்புறுத்தப்படுவது போன்ற காட்சிகள் அடங்கிய புகைப்படம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது தெரிந்ததே. (மலரும்.com)


  Comments - 0

  • sakthi Tuesday, 20 May 2014 07:15 AM

    இது ஓவர்...

    Reply : 0       0

    prakash Tuesday, 20 May 2014 09:55 AM

    Ungalai kadavul mannikkave mattar

    Reply : 0       0

    prakash Tuesday, 20 May 2014 09:58 AM

    Ungalai kadavul mannikave mattar

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X