2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வவுனியா தேசிய இளைஞர் மன்ற இணைப்பாளர் நியமனம்

Kogilavani   / 2014 மே 20 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

வவுனியா மாவட்டத்திலுள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அலுவலகத்திற்கு இளைஞர் திட்ட இணைப்பாளராக செல்வி.ஜே.ருக்ஸா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு கிடைக்கப்பெற்றுள்ள நியமனக் கடிதத்தில் இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும கையொப்பமிட்டு ஜீன் மாதம் 2 ஆம் திகதியிலிருந்து கடமைகளைப் பொறுப்பேற்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட நேர்முகப் பரீட்சையின் மூலமாக இந்த நியமனம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை இளைஞர் திட்ட இணைப்பாளர் நியமனம் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கு இதுவரையும் வழங்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X