2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இருவருக்கு சுயதொழில் நிதியுதவி

Suganthini Ratnam   / 2014 மே 21 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன் 

ஒருவரை மட்டும் குடும்பத் தலைவராகக் கொண்ட குடும்பங்களுக்கு சுயதொழில் மேற்கொள்வதற்காக சமூக சேவைகள் அமைச்சால் வழங்கப்பட்டுவரும் நிதியுதவி, கிளிநொச்சி மாவட்டத்தில் 02  பேருக்கு  வியாழக்கிழமை (22) வழங்கப்படவுள்ளதாக அம்மாவட்ட சமூக சேவைகள் பிரிவு  தெரிவித்தது.

கண்டாவளை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த  ஒருவருக்கு 15,000 ரூபாவும் பூநகரி பிரதேச செயலகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு 10,000 ரூபாவும் வழங்குவதற்கான நிதி  சமூக சேவைகள் அமைச்சின் பணிப்பாளர் ஜே.ஏ.சரத் ரவீந்திரவினால் புதன்கிழமை (21) அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிதியின் மூலம் இவர்கள் இருவரும்  ஏற்கெனவே தெரிவித்திருந்த சுயதொழில் முயற்சியை மேற்கொள்ளவுள்ளனர்.

பாடசாலை செல்லும் பிள்ளைகளை கொண்ட வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள  குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில்,  சுயதொழில்; உதவியை சமூக சேவைகள் அமைச்சு நாடு முழுவதும் வழங்கி வருகின்றது.

இதற்கான விண்ணப்பங்களை கிராம அலுவலர் ஊடாக மாவட்டச் சமூக சேவைகள் பிரிவிற்கு அனுப்பி, அங்கிருந்து சமூக சேவைகள் அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். சுயதொழில் மேற்கொள்ளவுள்ள திட்டத்தின் வலிமையை பொறுத்து 10,000 முதல் 25,000 ரூபா வரை  அமைச்சு நிதியுதவி வழங்கும்.

இந்தத் திட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த வருடம்  40 பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X