2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சமூக ஒருமைப்பாட்டு தேசிய செயற்பாட்டுத் திட்ட கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2014 மே 22 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


சமூக ஒருமைப்பாட்டு தேசிய செயற்பாட்டுத் திட்டம் தொடர்பான வரைபுபடுத்தும் கலந்துடையாடல் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை (22) நடைபெற்றது.

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சால் இலங்கையின் சமூக ஒருமைப்பாடு தொடர்பான அரசாங்கத்தின் கொள்கை சட்டம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது.

அரசாங்கத்தின் மேற்படி கொள்கை சட்டத்தை மேம்படுத்தும் பொருட்டு வரைபுபடுத்தும் இரண்டாம் கட்ட வேலைத்திட்டம் அமைச்சால் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

மேற்படி வேலைத்திட்டத்தின் ஊடாக மக்கள் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் மூலம் தேவையான ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதே இதன் நோக்கமாகும் என அக்கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில்  தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் எம்.எஸ்.விக்கிரமசிங்க, சிரேஷ்ட உதவிச் செயலாளர் எஸ்.எல்.எம்.ஹசீம், தொழில்நுட்ப உத்தியோகத்தர் தயானி பனகொட உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X