2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சி வியாபாரிகள் உயரதிகாரிகளிடம் மனுக் கையழிப்பு

Super User   / 2014 மே 22 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சு.பாஸ்கரன்


கிளிநொச்சி பொதுச்சந்தை வியாபாரிகள் தமக்கு நிரந்தர கடைகளை அமைத்துத் தருமாறு கோரி உயரதிகாரிகளிற்கு புதன்;கிழமை (21) மனுக்களை கையழித்தனர்.

கிளிநொச்சி பொதுச்சந்தையில் தமக்கு தரப்பட்டுள்ள கடைகள் தற்காலிக கட்டடமாக இருப்பதாலும், இடம் போதாமல் இருப்பதாகவும் தமக்கு நிரந்தர கடைகளை அமைத்து தருமாறு கோரியே சந்தை வியாபாரிகள் உயரதிகாரிகளிற்கு மனுக்களை கையழித்துள்ளனர்.

கிளிநொச்சி அரச அதிபர் அலுவலகத்துக்கு சென்று அரச அதிபருக்கான மனுவை மேலதிக அரச அதிபர் எஸ்.சிறிநீவாசகனிடம் கையளித்தனர். தமது கடைகள் தொடர்ந்தும் தற்காலிக கொட்டகைகளில் இயங்குவதால் அதில் நிரந்தர கட்டடம் ஒன்றை அமைத்து தருமாறு அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தம்மை புறக்கணித்து நடப்பதாகவும், தம்முடைய நியாயங்களை விசாரித்து நடவடிக்கைகள் எதுவும் எடுப்பதில்லை எனவும் சந்தை வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர். பூட்டப்பட்டுள்ள ஒரு தொகுதி கடைகளை தமக்கு தருமாறு கேட்டமைக்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததாகவும் குறித்து வியாபாரிகள் கவலை தெரிவித்ததுடன், பூட்டப்பட்ட கடைகளில் மது அருந்துதல் உள்ளிட்ட பல தீய செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் குறிப்பிடுகின்றனர். அத்துடன் வியாபாரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மொத்த வியாபாரிகளிற்கும் சில்லறை வியாபாரம் சொய்ய அனுமதிக்கப்படுவதாகவும், இது குறித்து ஆதாரத்துடன் தாம் தெரியப்படுத்தியும் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் இவ்விடயம் தொடர்பாக கரைச்சிப் பிரதேச சபை தவிசாளர் கருத்துத் தெரிவிக்கும் போது,

மீன் கடைத் தொகுதி, மரக்கறி கடைத் தொகுதி ஆகியவற்றுக்கான கட்டடங்கள் நிரந்தரமாக அமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ள போதும் ஏனைய வியாபார நிலையங்களுக்கான கட்டங்கள் அமைக்கப்படவில்லை. அத்துடன் மாதாந்த வரிப்பணம் செலுத்தாத வியாபாரிகளின் வியாபார நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.

மேலதிக அரச அதிபர் எஸ்.சிறிநீவாசகன் இம் மனு தொடர்பாக தான் அரச அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X