2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பிரதேச மாற்றுத்திறனாளிகள் குழு உருவாக்கம்

Kogilavani   / 2014 மே 23 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


பூநகரிப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மாற்றுத் திறனாளிகள் குழுவொன்று வியாழக்கிழமை (22) உருவாக்கப்பட்டுள்ளதாக செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் செ.சுரேந்திர தெரிவித்தார்.

குடும்பப் புனர்வாழ்வு நிறுவனத்தின் நிதி அனுசரணையில் பிரதே செயலகத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற மாற்றுத் திறனாளிகளுடனான கலந்துரையாடலிலே இக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இக்குழு பிரதேச மாற்றுத் திறனாளிகளின் நலன் தொடர்பான விடயங்களில் அக்கறையுடன் செயற்படும் என அவர் தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வில் மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் வே.தபேந்திரன், பிரதேச மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X