2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நெடுங்கேணியில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு

Suganthini Ratnam   / 2014 மே 23 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா, நெடுங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் விவசாயிகளும் வாகன உரிமையாளர்களும்  சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.

கடந்த 20ஆம் திகதியிலிருந்து பெற்றோல் முடிவடைந்த நிலையில்;, பெற்றோல்; பெற்றுக்கொள்வதற்கு மக்கள் வெளிப் பிரதேசங்களுக்கு செல்லவேண்டியுள்ளது. 

அத்துடன், ஒட்டுசுட்டான் எரிபொருள் நிலையத்திலும் பெற்றோலுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அங்கும் விவசாயிகளும் வாகன உரிமையாளர்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் எரிபொருளை கொள்வனவு செய்யாமையே  தட்டுப்பாட்டுக்கு காணரம் என தெரிவிக்கும் மக்கள்,  விவசாயத்தை நம்பியுள்ள இப்பிரதேசத்தில் டீசல், மண்ணெண்ணை, பெற்றோலுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு தொடர்பில் பொற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X