2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

முல்லைத்தீவுக்கு நாமல் எம்.பி. விஜயம்

Suganthini Ratnam   / 2014 மே 26 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாளைய இளைஞர் அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்ஷ முல்லைத்தீவு மாவட்டத்துக்கு  திங்கட்கிழமை (26) விஜயம் செய்துள்ளார்.

முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் உயர்தர மாணவர்களுக்கு அரசாங்கத்தால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட  ஈ - பாட்டசாலா புதிய இணைய கல்வித் திட்டம்  அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொள்ளும் முகமாகவே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ முல்லைத்தீவுக்கு விஜயம் செய்தார்.

இந்நிகழ்வில்  வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள், முல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலகத்தின் அதிகாரிகள், அதிபர்கள், மாணவர்கள் என பலர்;  கலந்து கொண்டனர்.

இதன் பின்னர்,  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரமுகர்கள் வற்றாப்பளை ஸ்ரீகண்ணகி அம்மன் கோவிலுக்கும் சென்று வழிபாடுகளில்  ஈடுபட்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X