2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

விபத்து; ஒருவர் பலி மற்றவர் படு காயம்

Kanagaraj   / 2014 மே 26 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா நெடுங்கேணி பகுதியில் இன்று (26) பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றையவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர்.

ஒலுமடுவில் இருந்து நெடுங்கேணி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் கன்டர் ரக வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ரா. ஆனந்தகுமார் என்ற குடும்பஸ்தர் பலியாதுடன் கோ. ஜெயரூபன் என்பவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய வாகன சாரதியை கைது செய்துள்ளதுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X