2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மன்னார் மரக்காலையில் தீ

Menaka Mookandi   / 2014 ஜூன் 01 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள மரத்தளபாட விற்பனை நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (01) காலை ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த விற்பனை நிலையத்தின் ஒரு பகுதி தீக்கிரையாகி சேதமடைந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னார் தலைமன்னார் பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள பொது விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக உள்ள மரக்காலையிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஞாயிறு தினங்களில் குறித்த மரக்காலையில் பணியாளர்கள் இல்லாமையினால் அயலவர்கள் வழங்கிய தகவலின்; அடிப்படையிலே குறித்த தீ அணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் சிறிது நேரத்தில் தீ முழுமையாக பரவி குறித்த நிலையத்தில் ஒரு பகுதியில் இருந்த மரம் சீவும் 2 இயந்திரங்கள் உற்பட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தளபாடப்பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக குறித்த நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.

தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மன்னார் பொலிஸார் தாம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X