2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தூய்மையாகச் சுற்றாடலை வைத்திருத்தல்

Super User   / 2014 ஜூன் 03 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

பாடசாலை சுற்றாடலைச் தூய்மையாகப் பேணுதல் தொடர்பான போட்டியில் வெற்றியீட்டிய கிளிநொச்சி, முல்லைத்தீவு பாடசாலைகளுக்கு பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய சுற்றாடல் பாதுகாப்பு சபையின் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான உதவிப் பணிப்பாளர் து.சுபோகரன் இன்று செவ்வாய்க்கிழமை (03) தெரிவித்தார்.

கொழும்பு றோயல் கல்லூரியில் எதிர்வரும் வியாழக்கிழமை (05) நடைபெறவுள்ள சர்வதேச சுற்றாடல் பாதுகாப்பு தின நிகழ்வில் வைத்தே பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேற்படி போட்டியில் பாடசாலை சுற்றாடலை பொலித்தீன் பிளாஸ்டிக் பாவனையற்ற வகையில் வைத்திருந்தமை, சக்தி சேமிப்பை பேணுதல், பாடசாலைச் சுற்றாடலை பசுமையாக வைத்திருத்தல், ஆரோக்கியமான நிலையில் பாடசாலையை வைத்திருத்தல், போன்ற விடயங்கள் அவதானிக்கப்பட்டு ஒரு மாவட்டத்தில் மூன்று பாடசாலைகள் என்ற ரீதியில் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, கிளிநொச்சி மாவட்டத்தில் முதலிடத்தினை கண்டாவளை மகா வித்தியாலயமும், இரண்டாமிடத்தினை முருகானந்தா மகா வித்தியாலயம் மற்றும் சென்.திரேசா மகளிர் கல்லூரி ஆகியன பெற்றுக்கொண்டன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடத்தினை மாங்குளம் மகா வித்தியாலயமும், இரண்டாமிடத்தினை பாலிநகர் மகா வித்தியாலயமும், மூன்றாமிடத்தினை முள்ளிவளை வித்தியானந்தா கல்லூரியும் பெற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
                    



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X