2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நட்பு நிலையத்தின் செயற்பாடுகள் விஸ்தரிப்பு

Super User   / 2014 ஜூன் 03 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவது தொடர்பில் உருவாக்கப்பட்ட நட்பு நிலையத்தின் செயற்பாடுகளை மேம்படுத்துவது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை (03) கலந்துரையாடப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில், 'பால் மற்றும் பால்நிலை அடிப்படைகள்' தொடர்பிலான கலந்துரையாடல் மாவட்டச் செலயக மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் செ.ஸ்ரீநிவாசகன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அமைந்துள்ள மேற்படி நட்பு நிலையத்தின் செயற்பாடுகளை அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகளின் மூலம் விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்ளுதல் என்பது தொடர்பில் ஆராயப்பட்டது.

அத்துடன், குடும்ப வன்முறைகள் காரணமாக பெண்கள் பாதிக்கப்படுதல் மற்றும் பெண்களுக்கு எதிராக சமூகத்தில் இழைக்கப்படும் வன்முறைகளைக் கட்டுப்படுத்தல் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

மேலும், பெண்களின் பாதுகாப்பினைப் பேணுதல் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தினை எவ்வாறு மேம்படுத்துவது என்பது தொடர்பாக கிளிநொச்சி வைத்தியசாலை மகப்பேற்று நிபுணர் வைத்தியகலாநிதி டி.குருபரன் கருத்துரைகளை வழங்கினார்.

இந்தக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி, கண்டாவளை ஆகிய பிரதேச செயலகங்களின் பிரதேச செயலர்கள், கிளிநொச்சி பொலிஸ் நிலையப் பொலிஸார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X