2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அம்பியூலன்ஸ் விபத்தில் மூவர் காயம்

Kanagaraj   / 2014 ஜூன் 03 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இவர்கள், மாஞ்சோலை, வவுனியா ஆகிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக  வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலைக்குச் சொந்தமான அம்பியூலன்ஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாகவும், அதில் பயணித்த சாரதி, உதவியாளர் மற்றும் தாதியொருவருமாக மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் மாஞ்சோலை வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலைக்கு நேற்று திங்கட்கிழமை இரவு நோயாளிகளை ஏற்றிக்கொண்டு யாழ். வைத்தியசாலையில் அனுமதித்து  விட்டு மீண்டும் முல்லைத்தீவுக்கு வரும்போதே அதிகாலை 4 மணியளவில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அம்யூலன்ஸ் வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி,வீதியோரத்தில் இருந்த மின் கம்பத்துடன் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X