2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வாக்குரிமையை வலியுறுத்தி ஊர்வலம்

Menaka Mookandi   / 2014 ஜூன் 04 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத், ரொமேஸ் மதுசங்க


வவுனியாவில் வாக்குரிமையின் அவசியத்தை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை (03)  ஊர்வலமொன்று நடத்தப்பட்டது.

வவுனியா மாவட்ட செயலகத்தினால் ஞானம் அறக்கட்டளையின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந்த ஊர்வலத்தில், வாக்குப்பதிவு செய்வதில் மக்கள் ஆர்வம் செலுத்த வேண்டும் என்பதனை வலியுறுத்திய பதாதைகளை தாங்கியவாறு வாக்காளர் பதிவில் ஈடுபடும் உத்தியோகஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

வாக்காளர் பதிவு வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஊர்வலத்தினை அடுத்து வழிப்புணர்வு வீதி நாடகங்களும் இடம்பெற்றன.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திரவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ருந்த, இந்த ஊர்வலமானது, நகர வீதிகள் வழியாக சென்று மீண்டும் மாவட்ட செயலகத்தை அடைந்தது.

இதில், கிராம சேவகர்கள், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X