2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

முல்லைத்தீவு மக்களின் பிரச்சினை குறித்து டக்ளஸ் ஆராய்வு

Menaka Mookandi   / 2014 ஜூன் 04 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


முல்லைத்தீவு மாவட்டத்திற்கு செவ்வாய்க்கிழமை (03) விஜயம் செய்த, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, அம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டு மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் நேரில் ஆராய்ந்தறிந்து கொண்டார்.

அதுமாத்திரமின்றி, பல்வேறுபட்ட மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களது தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் நேரில் ஆராய்ந்தறிந்து கொண்டார்.

இதன்பிரகாரம், சுதந்திரபுரத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர், சுதந்திரபுர கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகளையும் சந்தித்து அவர்களது தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் அக்கிராம மக்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படக்கூடிய சுயதொழில் திட்டங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தியிருந்தார்.

இச்சந்திப்பின் போது அரச சார்பற்ற நிறுவனமொன்று, மக்களுக்கு கடனடிப்படையில் மூலப்பொருட்களை வழங்குவதாகக் கூறி மக்களை ஏமாற்றியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர், துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி உரிய தீர்வு பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்பதாக கூறினார்.

அத்துடன், உடையார்கட்டுப் பகுதியிலுள்ள வெள்ளப்பள்ளம் பகுதியில் வாழ்ந்து வரும் மக்களுக்கு, அவர்கள் குடியிருக்கும் காணிகளை உரித்தாக்குவது தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்தும் இந்திய வீட்டுத் திட்டம் குறித்தும் கவனம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X