2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியில் ரயில் மோதி இருவர் காயம்

Menaka Mookandi   / 2014 ஜூன் 04 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கொழும்பிலிருந்து பளை நோக்கிப் பயணித்த இரவு நேர தபால் ரயிலில் டிப்பர் வாகனமொன்று மோதி விபத்துக்குள்ளானதில் அவ்வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று செவ்வாய்கிழமை (03) இரவு 10 மணிக்கு, கிளிநொச்சி கொக்காவிலுக்கும் முறிகண்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்தே இந்த ரயில் விபத்து சம்பவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X