2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கசிப்பு, அனுமதிப்பத்திரமின்றிய மது விற்பனை கட்டுப்பாட்டுக்குள்

Kanagaraj   / 2014 ஜூன் 04 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அனுமதிப்பத்திரமின்றிய மதுபான விற்பனை, கசிப்பு உற்பத்தி விற்பனை உள்ளிட்டவை மே மாதத்தில் பெருமளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கிளிநொச்சி– முல்லைத்தீவு மதுவரித் திணைக்களத்தினர் இன்று புதன்கிழமை (04) தெரிவித்தனர்.

மே மாதத்தில், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் அனுமதித்ததிற்கு மேலதிகமாக கள் வைத்திருந்த 51 பேரும், அனுமதி பெறாமல் கள் வைத்திருந்த 4 பேரும் பிடிக்கப்பட்டு அவர்களுக்கு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றங்களினால் 73 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

இவற்றுள் கசிப்பு மற்றும் அனுமதிப்பத்திரமின்றிய மதுபானம் விற்பனை எதுவும் இடம்பெறவில்லையென தெரிவித்தனர்.

எனினும் இந்த வருடத்தில் ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், கசிப்பு, அனுமதிப்பத்திரமின்றிய மது, கள் விற்பனை உள்ளிட்டவை தொடர்பாக 11 இலட்சத்து 2500 ரூபாவும், ஏப்ரல் மாதத்தில் 80 ஆயிரத்து 500 ரூபாவும் தண்டம் விதிக்கப்பட்டிருந்ததாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X