2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வாக்காளர் இடாப்பு மீளாய்வு தொடர்பில் விழிப்புணர்வு ஊர்வலம்

Kanagaraj   / 2014 ஜூன் 07 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


வாக்காளர் இடாப்பு மீளாய்வு- 2014 எனும் தொனிப்பொருளின் விழிப்புணர்வு ஊர்வலம் மன்னாரில் நேற்று (06) இடம்பெற்றது. மன்னார் பிரதேச செயலகம் மற்றும் மன்னார் மாவட்ட தேர்தல்கள் திணைக்களம் ஆகியவை இணைந்து மேற்படி நிகழ்வினை ஏற்பாடு செய்தனர்.
 
நேற்று(6) வாக்காளர் தினம்; அனுஷ்டிக்கப்பட்ட நிலையிலேயே, மன்னாரில் மேற்படி விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றது.
 
வாக்களிப்பது ஒவ்வொருவரினதும் ஜனநாக உரிமை என்பதனை வழியுறுத்தியும் 2014ம் ஆண்டின் வாக்காளர் இடாப்பினை மீளாய்வு செய்வதனை வழியுறுத்தியும் மேற்படி விழிப்புனுர்வு ஊர்வலம் இடம்பெற்றது.
 
மன்னார் பிரதேச செயலகத்தின் முன்னால்; ஆரம்பித்து சந்தை வீதி, மன்னார் தலைமன்னார் வீதி, தபாலக வீதி, பொலிஸ் நிலைய வீதியூடாக மன்னார் மாவட்ட செயலகத்தை குறித்த ஊர்வலம் சென்றடைந்திருக்கின்றது.
 
இதன்போது வாக்காளர் ஒவ்வொருவருக்கும் தமது வாக்காளர் பதிவுகளை உறுதிப்படுத்தும் வகையிலான அறிவுறுத்தல்களை தாங்கிய துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன.
 
ஊர்வலத்தைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டிமெல், நானாட்டான், மடு பிரதேச செயலாளர்கள் மன்னார் நகர சபை, நானாட்டான் பிரதேச சபைகளின் தலைவர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X