2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சிறுவர் பாதுகாப்பு செயலமர்வு

Kanagaraj   / 2014 ஜூன் 09 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன் 


கிளிநொச்சி மாவட்டச் செயலக சிறுவர் பாதுகாப்பு பிரிவின் ஏற்பாட்டில் 'குடும்ப வன்முறையும் சிறுவர் பாதுகாப்பும்' எனும் தலைப்பிலான செயலமர்வு கிளாலியில் திங்கட்கிழமை (09) இடம்பெற்றது.

இந்நிகழ்வில், சிறுவர் பாதுகாப்பு பிரிவின் கிளிநொச்சி மாவட்ட உத்தியோகத்தர் இராஜரட்ணம் செந்தூரன் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினார்.

குடும்பங்களில் இடம்பெறும் வன்முறைகள் சிறுவர்களை எவ்வாறு பாதிக்கின்றது என்பது தொடர்பிலும்  குடும்பங்களில் சிறுவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைகள் தொடர்பாகவும் பெற்றோர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டதுடன், சிறுவர்கள் நலனில் பெற்றோர்களை அக்கறை செலுத்தும் படியும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.

இந்தச் செலயமர்விற்கான நிதி அனுசரணையை யாழ்.சமூக செயற்பாட்டு மையம் வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X