2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சுயதொழில் உபகரணங்கள்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 11 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்,நவரத்தினம் கபில்நாத்


மன்னார் மாவட்டத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ், 28 பேருக்கு சுயதொழில் உபகரணங்களை  தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவை செவ்வாய்க்கிழமை (10) வழங்கிவைத்தது.

மன்னார் மாவட்ட வளர்பிறை மகளிர் அமைப்பைச்; சேர்ந்த  தெரிவுசெய்யப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கே மேற்படி சுயதொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மூன்றாவது கட்டமாக சுயதொழில் உபகரணங்கள்  வழங்கப்படும் நிலையில், இதுவரையில்  103 குடும்பங்கள் பயனடைந்துள்ளன.

மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சமாசக் கட்டடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண போக்குவரத்து  அமைச்சர் பா.டெனிஸ்வரன்,  தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடமாகாண பொது இணைப்பாளர் அன்றனி ஜேசுதாசன், மன்னார் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் மாவட்ட இணைப்பாளர் பெனடிற் குரூஸ், தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் மன்னார் மாவட்ட பெண்கள் திட்ட பொறுப்பதிகாரி ஜே.மேறி பிரியங்கா, தாழ்வுப்பாடு பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராஜ், வங்காலை பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயபாலன், மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச்சங்கங்களின் சமாச தலைவர் என்.எம்.ஆலம்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X