2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பிரதேச செயலக கட்டடத்தை கட்டுவதற்கு தடை

Kanagaraj   / 2014 ஜூன் 13 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலகத்திற்கான செயலக கட்டடத்தை கட்டுவதற்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் இன்று வெள்ளிக்கிழமை (13) இடைக்கால தடையுத்தரவு விடுத்தார்.

அத்துடன் குறித்த வழக்கினை எதிர்வரும் மாதம் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

கண்டாவளைப் பிரதேச செயலகத்திற்காக புளியம்பொக்கணையில் கட்டப்பட்டு வரும் கட்டடத் தொகுதியானது தாழ்வான நிலத்தில் கட்டப்படுகின்றதாகத் தெரிவித்து கண்டாவளைப் பிரதேச கமக்கார அமைப்பினால் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை (11) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதில் பிரதேச செயலக சமுர்த்தி வங்கி முகாமையாளர், மற்றும் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர்கள் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இந்நிலையில்,  குறித்த வழக்கு இன்று (13) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குறித்த கட்டட நிர்மாண வேலைகளை நிறுத்தும்படி இடைக்காலத் தடையுத்தரவு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதியில் இந்தக் கட்டடம் கட்டப்படுவதினால் வெள்ளநீரானது வடிந்தோட முடியாத நிலையேற்படும் என்பதினாலேயே வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக கண்டாவளை பிரதேச கமக்கார அமைப்பினர் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X