2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

காணாமல் போன மாணவன் வீடு திரும்பினான்

Kanagaraj   / 2014 ஜூன் 14 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா நகரப் பகுதியில் வைத்து கடந்த மாதம் 27ஆம் திகதி காணாமல் போனதாகக்கூறப்படும் கல்மடு கிராமத்தை சேர்ந்த  மகாலிங்கம் ரஜீவன் என்ற மாணவன் வெள்ளிக்கிழமை (13) இரவு வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவன் கடந்த 27ஆம் திகதி வவுனியா பகுதியில் மரக்கறி விற்பனை செய்வதற்காக சென்றிருந்த போது காணாமால் போயுள்ளார்.

இதனையடுத்து மனித உரிமை ஆணைக்குழு மற்றும் வவுனியா பொலிஸ் என்பவற்றுக்கு மாணவனது பெற்றோர்கள் முறைப்பாடு மேற்கொண்டிருந்தனர்.

இந் நிலையில் வெள்ளிக்கிழமை (13) இரவு கைகள் கட்டப்பட்ட நிலையில் இனந்தெரியாதோரால் குறித்த மாணவன் அவரது வீட்டிற்கு அருகாமையில் கொண்டு வந்து விடப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, குறித்த மாணவனை அவரது பெற்றோர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மாணவனின் உடற்பகுதியில் அடி காயங்களோ துன்புறுத்தலுக்கான சான்றுகளோ இல்லை என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி மு. அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொர்பில்  மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X