2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இந்திய பிரதமருக்கு எதிரான எதிர்ப்புக்கு த. தே.கூ. கண்டனம்

Kanagaraj   / 2014 ஜூன் 14 , பி.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலங்கை விடயத்தில் தலையிட வேண்டாம் என வலியுறுத்தி அரசாங்கத்தின் ஆதரவாளர்களினால் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஆகியோரை கண்டித்து அவர்களுடைய உருவப்படங்கள் எரிக்கப்பட்ட சம்பவங்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வன்;மையாக கண்டிப்பதாக கூட்டமைப்பின் வன்னி மாவட்ட  நாடளுமன்ற உறுப்பினரும்,டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் நேற்று (14) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கைத் தமிழ் மக்களுக்கு இன்றைய சூழ்நிலையில் கைகொடுக்கும் ஒரு சக்தியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியும்,தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவும் செயற்பட்டு வருகின்றனர்.

தன்னிச்சையாக  செயற்பட்டு வந்த இலங்கை அரசு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பின் பின் சற்று சிந்தித்து செயற்படும் தருவாயில் உள்ளது.

இலங்கைத்தமிழர்களுக்கு இலங்கை அரசு கொடுக்கவேண்டிய உரிமையை பிரிதொரு நாடு பெற்றுக்கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள திடீர் ஆட்சி மாற்றம் இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு நல்லதொரு விடிவை பெற்றக்கொடுக்கவுள்ளது.

இந்நிலையில், வடமாகாண சபைக்கு வழங்கப்பட வேண்டிய அதிகாரங்களை, இலங்கை மத்திய அரசு முடக்கி வைத்து தமது அதிகாரத்ததை பலப்படுத்தி வருகின்றது.

இதனால,; மாகாண சபையின் அதிகாரங்கள் வலுவிழந்த நிலையிலே காணப்படுகின்றன.

இந்நிலையில், வடமாகாண சபையின் அதிகாரங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும் குறிப்பாக இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஆகியோரை இலங்கை அரச அமைச்சர்கள் தொடர்ந்தும்  விமர்சித்து வந்தனர்.


கடந்த வாரம் கொள்ளுப்பிட்டியிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக ஒன்று கூடிய அரச ஆதரவாளர்கள,; இலங்கை விடயத்தில் தலையிட வேண்டாம் என வலியுறுத்தி   இந்திய பிரதமர் நரேந்திர மோடியினதும்,தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவவையும் கண்டித்து அவர்களுடைய உருவப்படங்கள் எரிக்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வரும் அவர்களுக்கு எதிராக இலங்கை அரசின் ஆதரவாளர்கள் என்ற இக்கைக்கூலிகளின் செயற்பாட்டை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வன்;மையாக கண்டிக்கின்றது.

இலங்கைத்தமிழர்களுக்கத குரல் கொடுக்கும் இவர்களுக்கு ஆதரவாக, தமிழ் தேசியக்கூட்டமைப்பு செயற்படும். என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X