2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

புதுக்குடியிருப்புச் சந்தைக்கான அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படும்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 16 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன் 


முல்லைத்தீவு மாவட்டத்தின்  புதுக்குடியிருப்புச் சந்தைக்கான  அடிப்படை வசதிகள்; படிப்படியாக நிவர்த்தி செய்யப்படுமென புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயலாளர் எஸ்.மிதிலைநாதன் இன்று திங்கட்கிழமை (16) தெரிவித்தார்.

இச்ச்சந்தை எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி இருப்பதுடன், சந்தைக்கான கட்டிடத்தொகுதி இல்லாமையால்  வியாபாரம் செய்வதில்  சிரமங்களை எதிர்நோக்குவதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை செயலாளரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இச்சந்தைக் கட்டிடம் அமைப்பதற்கு 2012ஆம் ஆண்டு அரசசார்பற்ற நிறுவனமொன்றிலிருந்து 05 மில்லியன் ரூபா கிடைத்தது.  எனினும், சந்தை அமைப்பதற்கு சொந்தக் காணி இல்லாமையால் குறித்த நிதி திரும்பிச் சென்றது.

இந்நிலையில், 2013ஆம் ஆண்டு தொடக்கத்தில் புதுக்குடியிருப்பு வாழ் அன்பர் ஒருவர் சந்தை அமைப்பதற்கு தனது 02 ஏக்கர் காணியை நன்கொடையாக வழங்கினார். இருப்பினும், இக்காணியில் சந்தைக் கட்டிடம் அமைப்பதற்கு நிதி கிடைக்கவில்லை.

இந்நிலையில், இக்காணியில் வர்த்தகர்கள் தாமாகவே வியாபார நிலையங்களை அமைத்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், சந்தைக்குத் தேவையான குடிநீர் மற்றும் மலசலகூட வசதிகளை பிரதேச சபை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X