2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சி வாள்வெட்டில் ஐவர் படுகாயம்

Kanagaraj   / 2014 ஜூன் 17 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தின் விநாயகர்புரம் பகுதியிலுள்ள கண்ணகை அம்மன் ஆலயத் திருவிழாவின்போது, இன்று செவ்வாய்க்கிழமை (17) அதிகாலை இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டில் படுகாயமடைந்த ஐவர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்தச்  சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி இரு குழுக்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில், ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் மற்றைய குழுவைச் சேர்ந்தவர்களை வாளால் வெட்டியுள்ளனர்

இதில் படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் அநுராதபுரம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X