2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சி வைத்தியசாலையில் நோயாளர்கள் அதிகம்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 17 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன் 

கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு நாளாந்தம் வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதால் மக்களுக்கு சேவைகளை வழங்குவதில் சிரமங்களை எதிர்நோக்குவதாக அவ்வைத்தியசாலை நிர்வாகம் இன்று செவ்வாய்க்கிழமை (17) தெரிவித்தது.

வெளிநோயாளர் பிரிவில் 3 வைத்தியர்கள் மட்டும் இருக்கின்றபோதிலும், நாளாந்தம்  வெளிநோயாளர் பிரிவில் 300 இலிருந்து 400 வரை நோயாளர்கள் வருகின்றனர். இதனால், நோயாளர்கள் அதிக நேரம் காத்திருந்து சிகிச்சை பெறவேண்டியுள்ளதுடன், வைத்தியர்களும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் கூறியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம், முழங்காவில், வேரவில், பூநகரி, பளை, வட்டக்கச்சி ஆகிய பிரதேச வைத்தியசாலைகளில் ஆய்வுகூட வசதிகள் இல்லாமையால்  கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு அதிகளவான நோயாளர்கள் வருகின்றனர்.

இந்நிலையில்,  பிரதேச வைத்தியசாலைகளில் ஆய்வுகூட வசதிகள் ஏற்படுமிடத்து கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடையுமெனவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X