2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வன்னி காணிப் பிரச்சினை தொடர்பில் விசேட கருத்தமர்வு

Menaka Mookandi   / 2014 ஜூன் 18 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட், நவரத்தினம் கபில்நாத்


மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் காணிப் பிரச்சினைகள் தொடர்பான விசேட கருத்தமர்வு செவ்வாய்க்கிழமை (17) காலை மன்னார் ஞானோதயத்தில் இடம்பெற்றது.

சட்ட மற்றும் சமூக நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையுடன் மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இவ்விசேட கருத்தமர்வு இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு மன்னார் பிரஜைகள் குழுவின் உப தலைவர் அந்தோணி சகாயம் தலைமை தாங்கினார். சட்ட மற்றும் நம்பிக்கை நிதியத்தின் சார்பாக சட்டத்தரணி எஸ்.ஐங்கரன், ஆலோசனைகள் வழங்கினார்.

அத்துடன், வடமாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் கலந்துகொண்டு, மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியதோடு மக்களுக்கு சில சட்ட நுணுக்கங்களையும் விளக்கங்களையும் வழங்கினார்.

இதன்போது, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்களின் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகள் கேட்டறிந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X