2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கொடி வாரத்தில் நிதி சேகரிப்பு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 19 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி.தபேந்திரன் 

கிளிநொச்சி மாவட்டத்தில் சர்வதேச புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி வாழ்வின் எழுச்சித் திணைக்களத்தால் நடத்தப்பட்ட கொடி வார நிகழ்வில் 539,000 ரூபா  திரட்டப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி ஆணையாளர் பி.ரி.எம்.இர்பான்  புதன்கிழமை (18) தெரிவித்தார்.

கரைச்சி, கண்டாவளை, பூநகரி மற்றும் பளை  பிரதேச செயலக பிரிவுகளில் நடத்தப்பட்ட கொடிவார நிகழ்வுகளில் மேற்படி பணம் சேகரிக்கப்பட்டதாகவும்  அவர் தெரிவித்தார்.

இந்தப் பணத்தைக்; கொண்டு சமுர்த்தியிலுள்ள வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள  மக்களுக்கு சமூகக் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கான பயனாளிகள் தெரிவு ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிலும் தற்போது இடம்பெற்று வருவதாகவும்  அவர் மேலும் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X