2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியில் பயனாளிகளுக்கு உதவித்தொகை

Suganthini Ratnam   / 2014 ஜூன் 19 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி.தபேந்திரன் 

கிளிநொச்சி மாவட்டத்தில் வாழ்வின் எழுச்சித் திணைக்களத்தால் (சமுர்த்தி) கடந்த ஜனவரி மாதத்திலிருந்து மே மாதம் வரையிலும் 18 இலட்சத்து 83 ஆயிரம் ரூபா உதவித்தொகை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி ஆணையாளர் பி.ரி.எம்.இர்பான் புதன்கிழமை (18) தெரிவித்தார்.

இந்தக் கொடுப்பனவு கரைச்சி, கண்டாவளை, பூநகரி மற்றும் பளை  பிரதேச செயலக பிரிவுகளிலிருந்து  தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், சமுர்த்தி பயனாளிகளின் இறப்புக் கொடுப்பனவாக  50 பேருக்கு தலா 10,000 ரூபா படி  5 இலட்சம் ரூபாவும் பிறந்த குழந்தைகளுக்கான கொடுப்பனவாக 62 குழந்தைகளுக்கு தலா 5,000 ரூபா படி  3 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவும் திருமணக் கொடையாக 56 பேருக்கு 2 இலட்சத்து 54 ஆயிரம் ரூபாவும் மாணவர்களுக்கான சிப்தொர புலமைப்பரிசில் கொடுப்பனவாக 144 மாணவர்களுக்கு 5 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாவும் மருத்துவக் கொடுப்பனவாக 2 இலட்சத்து 59 ஆயிரம் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளதாகவும்  அவர் மேலும் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X