2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கரைதுறைப்பற்றில் உள்ளூராட்சிவார நிகழ்வுகள்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 19 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன் 

உள்ளூராட்சி வாரத்தையொட்டி மக்கள் நலன்சார் நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தின்  கரைதுறைப்பற்று பிரதேச சபையால் முன்னெடுக்கப்பட்டுவருவதாக அப்பிரதேச சபைச் செயலாளர் சு.இரவீந்திரன் இன்று வியாழக்கிழமை (19) தெரிவித்தார்.

இம்மாதம் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட உள்ளூராட்சி வார நிகழ்வுகளில் கட்டிடங்கள் அமைப்பதற்கான அனுமதி வழங்கும் நடமாடும் சேவை, நூலக வாசகர்களை இணைத்தல், அனுமதி பெறாத விளம்பரப் பதாகைகளை அகற்றல், விசேடமான கழிவகற்றும் செயற்பாடுகள், டெங்கு விழிப்புணர்வுச் செயற்றிட்டம், மரம் நடுகை செயற்றிட்டம் ஆகியன மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் சனிக்கிழமை (21) பிரதேச சபையின் விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X