2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

குடிநீர் விநியோக திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல்

Kogilavani   / 2014 ஜூன் 20 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிளிநொச்சி மாவட்டத்திற்கான நீர் வழங்கல் திட்டம் மற்றும் யாழ்.மாவட்டத்திற்கான குடிநீர் விநியோக திட்டங்கள் தொடர்பிலான விரிவான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை(20) கொழும்பில் உள்ள நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது, இத் திட்டம் ஒரு சில குறுகிய சுயநலவாத தமிழ் அரசியல்வாதிகளால் ஏற்படுத்தப்பட்டு வரும் இடையூறுகள் காரணமாக தடைப்பட்டிருப்பது,  இத்திட்டத்தின் மூலம் கிளிநொச்சி குறிப்பாக தீவகம் உட்பட யாழ்.மாவட்ட மக்கள்; பெறக்கூடிய நன்மைகள் தொடர்பில் அமைச்சர் தினேஸ் குணவர்தனவிடம் எடுத்துரைக்கப்பட்டது. 
 
யாழ்.மாவட்டத்தில் தற்போது உள்ள நீர் வழங்கல் திட்டங்களை மேலும் மேம்படுத்துவது, விரிவுபடுத்துவது தொடர்பிலும்  மேலும் புதிய நீர்வழங்கல் திட்டங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவது குறித்தும் வடிகாலமைப்பு திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாக ஆரயப்பட்டது.

இக்கலந்துரையாடலில் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் செயலாளர் நிஹால் சமரவீர, மேலதிக செயலாளர் திருமதி. ரஞ்சனி பிள்ளை, வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் எஸ்.தவராசா, வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளர் டிவகலாலா உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X