2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கைவிடப்பட்ட தங்கூசி வலைகள் மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 22 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

கிளிநொச்சி, வலைப்பாடு கடற்கரையில் கைவிடப்பட்ட 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கூசி வலைகளை  மீட்டதாக கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை பிரதிப் பணிப்பாளர் ஆர்.ரவீந்திரன் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) தெரிவித்தார்.

தடைசெய்யப்பட்ட தங்கூசி வலை பாவனையை கண்காணிக்கும் நோக்கில் வலைப்பாடு கடற்கரைக்குச் வெள்ளிக்கிழமை (20)  சென்றபோதே இந்த வலைகளை மீட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த  வலைகளுக்கு அங்கு நின்ற மீனவர்கள் எவரும் உரிமை கோரவில்லை எனவும் அவர் கூறினார்.

நீரியல்வளத் திணைக்கள அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த வலைகளை நாளை திங்கட்கிழமை (23) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X