2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ஆமை கடத்திய இருவருக்கு பிணை

Suganthini Ratnam   / 2014 ஜூன் 22 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

கிளிநொச்சி, நாச்சிக்குடா பகுதியிலிருந்து வாகனத்தில்  ஆமையொன்றை  கடத்தியதாகக் கூறப்படும் இருவரையும்  தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான  சரீரப் பிணையில் செல்வதற்கு  கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வாகப்தீன்  சனிக்கிழமை (21) அனுமதியளித்தார்.

அத்துடன், குறித்த ஆமையை கடலில் விடுமாறும்  கிளிநொச்சி கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டார்.

மேற்படி ஆமையை  சனிக்கிழமை (21) காலை கடத்திச் சென்றுகொண்டிருந்ததாகக் கூறப்படும்  இவர்கள் இருவரையும் வீதிக் கடமையில் ஈடுபட்ட ஜெயபுரம் பொலிஸார்  கைதுசெய்ததுடன், ஆமையையும் கைப்பற்றினர்.

மேலும்,  குறித்த ஆமை கிளாலிக் கடலில் விடப்பட்டது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X