2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சி.விக்கு எதிராக துண்டுப்பிரசுரம்

Super User   / 2014 ஜூன் 22 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


- சுப்பிரமணியம் பாஸ்கரன்


வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராகத் துண்டுப்பிரசுரங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல இடங்களில் நேற்று சனிக்கிழமை (21) ஒட்டப்பட்டிருந்தது. 

வடமாகாண மீனவர் சங்க ஒன்றியம் என்று பெயரிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ள அந்த துண்டுப்பிரசுரத்தில், "முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்காக முன்வரும் தலைவரா அல்லது இலங்கை தமிழ் மீனவர்களின் பிரச்சினைகளுக்காக முன்வரும் தலைவரா?" என தலையங்கமிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, மூங்கிலாறு, வலைஞர்மடம், புதுமாத்தளன் ஆகிய இடங்களிலே இவ்வாறு துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X