2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பள்ளிமுனை கிழக்கு கிராமங்களினுள் கடல் நீர் செல்வதை தடுக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 23 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

javascript:void(0)-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், பள்ளிமுனை கிழக்கு பகுதியிலுள்ள கிராமங்களினுள் கடல் நீர் உட்செல்வதை தடுப்பதற்கான வேலைத்திட்டத்தை   மன்னார் நகரசபை விரைவில் முன்னெடுக்கவுள்ளதாக நகரசபையின் உபதலைவர் செ.ஜெம்ஸ் ஜேசுதாஸ் தெரிவித்தார்.

பள்ளிமுனை கிழக்கு பகுதியிலுள்ள 50 வீட்டுத்திட்டம், 49 வீட்டுத்திட்டம்,  41 வீட்டுத்திட்டம் ஆகிய 03  வீட்டுத்திட்ட கிராமங்களினுள்  கடல் நீர் உட்செல்கின்றது. இதனால், இங்குள்ள சுமார் 140 குடும்பங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதுடன், இவர்கள்   தற்காலிகமாக இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கான வேலைத்திட்டத்தை மன்னார் நகரசபையானது  யூ.என்.கெபிட்டா அமைப்பின்  10 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் முன்னெடுக்கவுள்ளது.

இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதன் மூலமாக  எதிர்வரும் காலத்தில் மேற்படி  கிராமங்களினுள் கடல் நீர்  உட்செல்வதை தடுக்க முடியுமெனவும் செ.ஜெம்ஸ் ஜேசுதாஸ் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X