2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பேருந்துச் சேவை சீரின்மையைக் கண்டித்து மறவன்குளத்தில் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 24 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா மாவட்டத்தின்  மறவன்குளம் கிராமத்திற்கான பேருந்துச் சேவை சீரின்மையைக் கண்டித்து அக்கிராம அலுவலர் காரியாலயத்திற்கு முன்பாக செவ்வாய்க்கிழமை (24)  காலை  பொதுமக்கள்  வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இக்கிராமத்திற்கு சேவையில் ஈடுபடும்; பேருந்துகள் குறித்த நேரத்திற்கு வருவதில்லை என்பதுடன்,  வரும் பேருந்துகளும்; நீண்ட நேரமாக வீதியில் தரித்துநின்று பயணிக்கின்றன.  இதனால்,  குறுகிய நேர பயணத்திற்கு அதிக  நேரம் செலவிட வேண்டியுள்ளதாக வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

தங்களது கிராமத்திற்கு இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகள் சேவையில் ஈடுபட வேண்டும் எனவும் இம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது வீதி மறியல் போராட்டத்தில்  ஈடுபட்ட பொதுமக்களுடன் இங்கு வந்த தரணிக்குளம் பொலிஸார் கலந்துரையாடியதுடன்,  போராட்டத்தை கைவிடுமாறும் கோரினர்.

இதேவேளை, பேருந்துகள் சீராக பயணிப்பதற்கு  தன்னாலான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அக்கிராம அலுவலரும்  தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, வீதி மறியல் போராட்டத்தில்  ஈடுபட்ட  பொதுமக்கள் அங்கிருந்து  கலைந்து சென்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X