2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இன, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நாளை சர்வமத வழிபாடு

Kanagaraj   / 2014 ஜூன் 24 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலங்கையில் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக இடம் பெற்று வரும் வன்முறைகளின் பின்னணியில் - குறிப்பாக முஸ்லிம் மக்களுக்கெதிராக அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில்; நாட்டிலும், குறிப்பாக மன்னார் மாவட்டத்திலும் இன, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கிறிஸ்தவ, இஸ்லாமிய, இந்து, பௌத்த சமயத்தவர்கள் ஒன்றிணைந்து நடாத்தும் சர்வமத இறைவழிபாடு நாளை (25) மாலை 4.00 மணி தொடக்கம் 6.00 மணி வரை மன்னார் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

மன்னார் ஆர். பி. ஆர் அமைப்பின் அனுசரணையுடன் மன்னார் மாவட்ட சர்வமதப் பேரவையால் ஏற்பாடு செய்யப்படும் இந்த சர்வமத வழிபாட்டோடு இணைந்ததாக கவனயீர்ப்புப் போராட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும் அதற்கான அனுமதியை பாதுகாப்புத் தரப்பினர் மறுத்திருந்தனர்.

இதனடிப்படையில் சர்வமத வழிபாட்டை மட்டும் நடத்துவதென மன்னார் சர்வமதப் பேரவை தீர்மானித்ததாக இந்த அமைப்பின் இணைத் தலைவர்களில் ஒருவராகிய அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தெரிவித்தார்.

இச்சர்வமத வழிபாட்டில் அனைத்து மக்களையும் கலந்துகொண்டு இன, மத நல்லிணக்கத்திற்காக இறைவேண்டல் செய்யுமாறு மன்னார் சர்வமதப் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X