2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மாற்று வலுவுடையோருக்கான சுயதொழில் பயிற்சி

Kogilavani   / 2014 ஜூன் 25 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி.தபேந்திரன்

கிளிநொச்சி தொழில்நுட்ப நிறுவனத்தினால் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாற்று வலுவுடையோருக்கான சுயதொழில் பயிற்சி நெறிக்கான விண்ணப்பங்கள் செவ்வாய்க்கிழமை (24) முதல் கோரப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் ச.மோகனபவன்  புதன்கிழமை (25) தெரிவித்தார்.

சமூக சேவைகள் அமைச்சின் ஆலோசனையின் கீழ், 6 மாத காலம் நடைபெறவுள்ள இந்த சுயதொழில் பயிற்சி நெறியானது எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.

தையல் பயிற்சி மற்றும் கைத்தொலைபேசி திருத்துதல் போன்ற பயிற்சிகள் இதன்போது வழங்கப்படவுள்ளதுடன், இந்தப் பயிற்சி நெறிக்காக மாற்றுவலுவுள்ள ஆண்கள் - 20, பெண்கள் - 20 பேர் என 40 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

பயிற்சியின் போது நாளாந்தம் 110 ரூபா ஊக்குவிப்புத் தொகையாக வழங்கப்படும் அதேவேளை பயிற்சி நிறைவில் 10,000 ரூபா பெறுமதியான சுயதொழில் உபகரணங்களும், அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் பொருத்தமான சுயதொழில் உதவிகளும் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

பயிற்சி நெறிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் தொழில்நுட்ப நிறுவனத்துடன், அல்லது கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதேச செயலகங்களிலுள் சமூக சேவை பிரிவுடன் அல்லது மாவட்டச் செயலகத்திலுள்ள மாவட்ட சமூக சேவைகள் பிரிவுடன் தொடர்புகொண்டு எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கும்படி அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X