2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

போலி நாணயத்தாள் வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 26 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

போலி 1,000 ரூபா நாணயத்தாள் ஒன்றை வழங்கி வர்த்தகர் ஒருவரிடம் பொருட்களை கொள்வனவு செய்ய முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில்  கைதுசெய்யப்பட்டு, புதன்கிழமை (25)  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இளைஞர் ஒருவரை எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் மா.கணேசராஜா உத்தரவிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பூதன்வயல் கிராமத்தில் உள்ள நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம்  கடந்த திங்கட்;கிழமை இரவு நடைபெற்றது. இந்த உற்சவத்தில்; கலந்துகொண்ட குறித்த இளைஞர், அங்குள்ள கடை ஒன்றில் பொருட்களை கொள்வனவு செய்துவிட்டு போலி 1,000  ரூபா நாணயத்தாள் ஒன்றை வர்த்தகரிடம் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த  1,000  ரூபா நாணயத்தாள் போலியானது என்பதை உணர்ந்துகொண்ட  வர்த்தகர், இது தொடர்பில்  பொலிஸாருக்கு தெரியப்படுத்தினார்.

அங்கு வருகை தந்த பொலிஸார் குறித்த இளைஞரிடம்  விசாரணை மேற்கொண்டதுடன், குறித்த இளைஞரை  நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கைதுசெய்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X