2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வேட்டைக்குச் சென்றவர் மரணம்

Super User   / 2014 ஜூன் 26 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

வேட்டைக்குச் செல்வதாகக் கூறி கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து சென்றவர் இன்று வியாழக்கிழமை (26) உயிரிழந்துள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி  இயக்கச்சி கோவில் வளவினைச் சேர்ந்த பொன்னையா நவரத்தினம் (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வேட்டைக்குச் செல்வதாக கூறி கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த நபர் சென்றுள்ளார். மூன்று நாளாகியும் வீடு திரும்பாத நிலையில் இன்று வியாழக்கிழமை (26) சங்கத்தாவளை மயானத்தில் மயங்கிய நிலையில் இவரை உறவினர்கள் மீட்டு சாவகச்சேரி வைத்தியாசாலையில் அனுமதித்துள்ளனர்.

தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக பளை மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்ட போது இவர் இடை நடுவே உயிரிழந்ததாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக பளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X