2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கல்வியியலாளர்களுக்கான ஆலோசனை வழிகாட்டல் பயிற்சி

Kanagaraj   / 2014 ஜூன் 26 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா தெற்கு வலய கல்வி அலுவலக கல்வியியலாளர்களுக்கான ஆலோசனை வழிகாட்டல் பயிற்சி பட்டறை இன்று (26) நடைபெற்றது.

வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி செ. அன்ரன் சோமராஜா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் உதவிக் கல்விப்ணிப்பாளர்கள் , ஆசிரிய ஆலோசகர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் வவுனியா பொது வைத்தியசாலையின் உள நல மருத்துவ நிபுணர் வைத்தியகலாநிதி எஸ். சிவதாஸ், பிரதிக்கல்விப்பணிப்பாளர் திருமதி நா. மாணிக்கவாசகம் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கியிருந்தனர்.

இதன்போது பல்வேறு நெருக்கடிகளுக்குள் உள்ளான மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை மேம்படுத்துவதற்காக புதிய யுக்திகளை கையாள்வதும் அதனூடாக மாணவாகளின் கல்வி அடைவு மட்டத்தை அதிகரிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றிருந்தது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X