2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ஏற்று நீர்ப்பாசனத்திற்கான அடிக்கல் நாட்டல்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 27 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி மாயவனூர் புழுதியாற்றில் ஏற்று நீர்ப்பாசனத்திட்டத்திற்கான  அடிக்கல்லை இன்று வெள்ளிக்கிழமை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நாட்டிவைத்தார்.

வடமாகாணசபையின் குறித்தொதுக்கப்பட்ட 32 மில்லியன் ரூபா செலவில் இந்த ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மேற்படி ஏற்று நீர்ப்பாசனத்தின் மூலம் 150 ஏக்கரில் சிறுதானியச் செய்கை மேற்கொள்ள முடிவதுடன், இதனால், 840 வரையான குடும்பங்கள் பயனடைவார்கள்.

இந்த நிகழ்வில்  வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.
 




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X