2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இலஞ்ச ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Kanagaraj   / 2014 ஜூன் 28 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்ட இளைஞர் யுவதிகளை ஒன்றிணைத்து இலஞ்ச ஊழலுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி சனிக்கிழமை(28) வவுனியா நகர் பகுதியில் இடம் பெற்றது.

வவுனியா மாவட்ட இலஞ்ச ஊழலுக்கு எதிரான சட்ட ஆலோசனை மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பேரணிக்கு, மாகாணத்தின் பிராந்திய இணைப்பாளர் ரவீந்திர சில்வா தலைமை தாங்கினார்.

வடமாகாணதில் இலஞ்ச ஊழல் அதிகரித்துள்ளமையை கண்டித்தும் அவற்றை தடுக்கும் முகமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வவுனியா, கிளிநெச்சி, முல்லைத்திவு, திருகோணமலை, மன்னார். யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் இளைஞர் யுவதிகளின் பூரண பங்கேற்புடன் இவ் ஆர்ப்பாட்ட பேரணி இடம் பெற்றது

வவுனியா மாவட்ட இலஞ்ச ஊழலுக்கு எதிரன சட்ட ஆலோசனை மையத்திலிருந்து தொடங்கிய  ஆர்ப்பாட்ட பேரணி பேருந்து நிலையவீதி ஊடாக வவுனியா பொதுவைத்தியசாலைக்கு  சென்று,  மீண்டும் வவுனியா மாவட்ட இலஞ்ச ஊழலுக்கு எதிரன சட்ட ஆலேசனை மையத்தில் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0

  • sinthu Thursday, 03 July 2014 05:11 AM

    we can stop corruption. I support. who is going to join with me?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X