2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியில் முள்ளந்தண்டு சிகிச்சை நிலையம் அமைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 30 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி.தபேந்திரன்

கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அமைந்துள்ள இடத்தில் முள்ளந்தண்டுச் சிகிச்சை நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை  மேற்கொள்ளப்படும் என வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்  தெரிவித்தார்.

இச்சிகிச்சை நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை  வடமாகாண சபையால் எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரதிபுரம், மலையாள்புரம், விவேகானந்த நகர், அம்பாள்புரம், செல்வநகர், பொன்னகர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களை கிருஷ;ணபுரம் விபுலானந்த விளையாட்டுக்கழக மைதானத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உட்பட   குழுவினர் ஞாயிற்றுக்கிழமை (29) சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது, முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு  சிகிச்சை அளிப்பதற்காக முள்ளந்தண்டு சிகிச்சை நிலையமொன்றை இங்கு அமைத்துத் தருமாறு  கிளிநொச்சி மாவட்டத்தைச்; சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் வடமாகாண சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இக்கோரிக்கையை செவிமடுத்தபோதே அவர் இதனைக் கூறினார்.

முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிலையமொன்று வவுனியா, பம்பன்மடுவில் உள்ளது. அங்கு 20 பேர் தங்கியிருந்து  சிகிச்சை பெறக்கூடிய வசதிகள் உள்ளன. இருப்பினும், தற்போது 12 பேரே தங்கிச் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
மேற்படி சிகிச்சை நிலையத்தில் வடமாகாணத்தைச்; சேர்ந்தவர்கள்   சிகிச்சை பெறமுடியும் எனவும் அவர் கூறினார்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X