2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

எமிழ் நகரில் விளையாட்டுத்தடாகம் அமைக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2014 ஜூன் 30 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

சகல விளையாட்டுக்களையும் நடத்தக்கூடிய வகையில் விளையாட்டுத் தடாகமொன்றை  மன்னார் எமிழ் நகர் பகுதியில் 260 மில்லியன் ரூபா செலவில் அமைப்பதற்கான  துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக  மன்னார் நகர சபையின் உபதலைவர் எஸ்.ஜேம்ஸ் ஜேசுதாசன் தெரிவித்தார்.

இது  தொடர்பில்  மன்னார் நகரசபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசத்தின் பணிப்புரைக்கு அமைய மன்னார் நகரசபையின் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாசன், நகரசபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் மற்றும்  நகரசபையின் சிரேஷ்ட தொழில்நுட்;ப உதவியாளர் எப்.இம்மானுவேல் ஆகியோர் கடந்த வாரம் கொழும்புக்குச் சென்று விளையாட்டுத்துறை அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளரைச் சந்தித்து கலந்துரையாடினர்.
இந்நிலையில், குறித்த பகுதியில்  மேற்படி விளையாட்டுத் தடாகம் அமைப்பதற்கு 260 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதாக விளையாட்டுத்துறை அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர்   உறுதியளித்ததாகவும் அவர் கூறினார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X