2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தங்கூசி வலை பயன்படுத்தி மீன்பிடித்த இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜூன் 30 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

சட்டவிரோதமாக வவுனியா குளத்தில் மீன்பிடித்ததாகக் கூறப்படும்  இருவரை திங்கட்கிழமை  (30) வவுனியா மாவட்ட தேசிய நீர்வள அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் கைதுசெய்து  வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக   அதிகாரசபையின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் பி.நிருபராஜ் தெரிவித்தார்.

அத்துடன், இவர்களிடமிருந்து  தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளை பறிமுதல் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேற்படி  குளத்தில் தடைசெய்யப்பட்ட  தங்கூசி வலைகளை பயன்படுத்தி இருவர் மீன் பிடிப்பதாக  வவுனியா குள மீன்பிடிப்பாளர் சங்கத்தினர் தமக்கு தெரியப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X